November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடமாகாணத்தில் அரச நிறுவன செயலாளர்கள் பலருக்கு இடமாற்றம்!

வடக்கு மாகாணத்தில் அமைச்சுக்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் நிர்வாக மறுசீரமைப்பு செய்யப்பட்டு, ஜனவரி 20 முதல் அமுலுக்கு வரும் வகையில் இவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் பா. செந்தில்நந்தனன், பேரவைச் செயலக செயலாளராக மாற்றம் பெற்றுள்ளார். மாகாண ஆளுநரின் செயலாளர், சரஸ்வதி மோகனநாதன் சுகாதார அமைச்சின் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பேரவைச் செயலகத்தின் செயலாளர் பி.குகநாதன், பிரதிப் பிரதம செயலாளர், பொது நிர்வாகத்துக்கு மாற்றம் பெற்றுள்ளார்.

அத்துடன்,வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன், மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக மாற்றம் பெற்றுள்ளதுடன், மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன், மாகாண கல்வி அமைச்சின் செயலாராக மாற்றம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

எனினும் ஆளுநரின் செயலாளரின் இடத்துக்கு எவரும் நியமிக்கப்படவில்லை