November 24, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரச ஊழியர்களின் ஓய்வு வயதை அதிகரிக்கும் வர்த்தமானி வெளியானது!

இலங்கையில் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக அதிகரிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி 2022 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வுபெறுவதற்கான வயது வயது 55 இல் இருந்து 65 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனினும் புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கமை எந்தவொரு அரச ஊழியரும் 55 வயதிற்கு பின்னர் ஓய்வு பெற்று செல்ல முடியுமென்பதுடன், 65 வயது நிரம்பிய பின்னர் கட்டாய ஓய்வில் செல்ல வேண்டும்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பிரகாரம் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை அதிகரிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதுடன், அது தொடர்பான சட்டமூலம் நவம்பர் மாதத்தில் பாராளுமன்றதத்தில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.