
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவரிடம் நேற்று மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அவர் கொழும்பிலுள்ள பொலிஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் சரத் வீரசேகர கலந்துகொண்டிருந்த நிலையில் அவருடன் தொடர்புகளை பேணியவர்களிடம் கொவிட் பரிசோதனை நடத்தப்படவுள்ளது.