13 ஆவது திருத்தம் தொடர்பில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அது தொடர்பில் இந்தியாவுடன் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இலங்கை என்பது இந்தியாவின் பிராந்தியங்களில் ஒன்று அல்லவெனவும், இதனால் இங்குள்ள பிரச்சனைகளை இங்கேயே கலந்துரையாடி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறப்பிட்டுள்ளார்.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை முழுமையான செயற்படுத்தமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரி, இந்தியப் பிரதமருக்கு தமிழ்க் கட்சிகள் கூட்டாக அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில், இன்று நடைபெற்ற அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் கருத்து கூறும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு அரசாங்கம் என்ற ஒன்று இருக்கின்றது. இதனை விடுத்து வெளியில் சென்று பேச வேண்டிய அவசியமில்லை என்பதனை தமிழ்க் கட்சிகளுக்கு கூறிக்கொள்வதாக அவர் அதன்போது குறிப்பிட்டுள்ளார்.