January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் முல்லைத்தீவு யுவதி சாதனை!

சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் இலங்கை சார்பில் போட்டியிட்ட முல்லைத்தீவை சேர்ந்த கணேஷ் இந்துகாதேவி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

பாகிஸ்தான் லாகூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியின் 25 வயதுக்கு உட்ப்பட்ட 50 – 55 கிலோ எடைப்பிரிவின் கீழ் கணேஷ் இந்துகாதேவி போட்டியிட்டார்.

தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரிப்பட்டமுறிப்பு புதியநகர் கிராமத்தில் வசிக்கும் இவர், சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கைக்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்ந்த்துள்ளார்.