தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் இன்று முதல் தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நேரிடும் என்று இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இலங்கை மின்சார சபையின் புதிய பொது முகாமையாளர் நியமனம் மற்றும் நிர்வாகத்தின் முறைகேடான செயற்பாடுகள் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினர் நேற்றைய தினம் சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது கொழும்பிலுள்ள மின்சார சபை தலைமை அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இந்நிலையில் இன்றைய தினத்தில் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்தி சட்டப்படி வேலை செய்யும் போராரட்டத்தை முன்னெடுப்போம் என்று அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.