ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்குவது தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் அவர்கள் விரைவில் பாராளுமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாக சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசாங்கத்தின் சில செயற்பாடுகள் தொடர்பில் அதிருப்தியடைந்துள்ள சுதந்திரக் கட்சியினர் அரசாங்கத்தில் இருந்து விலகுவது தொடர்பில் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வரும் நிலையிலேயே, பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவது தொடர்பில் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை தற்போது அமைச்சுப் பதவிகளை வகிக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அந்தப் பதவியில் தொடர்வதா? இல்லையா? என்பது தொடர்பில் அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்று கட்சியினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.