ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் இன்று நிகழ்த்தப்பட்ட அரச கொள்கை விளக்க உரை எந்தவித தெளிவும் அற்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த உரையில் இனப் பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பில் எந்தவித விடயமும் முன்வைக்கப்படவில்லை என்றும், இதனால் இந்த உரையை தாம் மிகவும் மோசமான உரையாகவே பார்ப்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடக்கு, கிழக்கு மக்கள் பிரதிநிதிகளை அவர்களின் கொள்கைகளை தற்காலிகமாக புறந்தள்ளி வைத்துவிட்டு அரசாங்கத்திற்கு ஒத்துழைக்க வருமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சுமந்திரன் கூறியுள்ளார்.
எங்களின் கொள்கைகளை ஏற்றே மக்கள் வாக்களித்துள்ளதால், அந்தக் கொள்கைகளை புறந்தள்ளி வைப்பது மக்கள் ஆணையை மீறுவது போலாகிவிடும் என்றும், இதனால் இந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்லவெனவும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரக் குறிப்பிட்டுள்ளார்.