November 26, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதமரின் இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்களாக இருவர் நியமனம்

இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்களாக இருவர் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய இந்து சமய விவகாரங்களுக்கான பிரதம ஆலோசகராக ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் நியமிக்கப்பட்டுள்ளதுடன், பிரதமரின் இந்து மத விவகாரங்களுக்கான ஆலோசகராக கலாநிதி ஜே.எம்.சுவாமிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமரின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்ட குறித்த இருவரும் இன்று அலரி மாளிகையில் பிரதமரிடம் இருந்து தங்களது நியமனக் கடிதங்களை இன்று பெற்றுக் கொண்டனர்.