இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினர் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இன்று காலை முதல் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் பணியாற்றும் மின்சார சபையின் பொறியியலாளர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள பொது முகாமையாளருக்கு எதிராகவே இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.