ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று முற்பகல் 10 மணிக்கு புதிய கூட்டத் தொடர் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இதன்போது அவர், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் முன்வைத்து சிம்மாசன உரையை நிகழ்த்தவுள்ளார்.
ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வருகை தரும் நிகழ்வை மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் பாராளுமன்ற சபை அமர்வு ஒத்திவைக்கப்படும்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் ஆரம்ப நிகழ்வுகள் அனைத்தும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றியே இடம்பெறுமென பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் 2021 டிசம்பர் 12 ஆம் திகதி முதல் இன்று வரையில் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.