இலங்கையின் பிரபல பெண் பாடகரும், இசை அமைப்பாளரும் மற்றும் இத்தாலியின் மிலான் நகரின் துணைத் தூதுவருமான நீலா விக்கிரமசிங்க காலமானார்.
திடீர் மாரடைப்பால் அவர் கலமானதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
71 வயதாக நீலா விக்கிரமசிங்க, கடந்த 10 ஆம் திகதி மிலான் நகரின் துணைத் தூதுவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
அவர், இன்றைய தினம் திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மிலானில் உள்ள மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்ட போது காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.