January 21, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆனந்தசங்கரிக்கு கொவிட் தொற்று உறுதி!

File Photo

தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் வீ.ஆனந்தசங்கரிக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆனந்தசங்கரியின் உடல்நிலையில் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும், அவரது வயதினை கருத்தில் கொண்டு யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் தங்கியிருந்து அவர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தை தனிமைப்படுத்த சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.