
யாழ்ப்பாணம், நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் நெற்புதிர் அறுவடை விழா இன்று இடம்பெற்றது.
தைப்பூசத்தினத்திற்கு முதல் நாள் இந்த விழா நடைபெறுவது வழமையாகும்.
இதன்படி 288 ஆவது வருடமாக இன்று நடைபெற்ற விழாவில், ஆலய அறங்காவலரும் சிவாச்சாரியாரும் ஆலயத்திற்குச் சொந்தமான மட்டுவிலில் உள்ள வயலுக்குச் சென்று முதலாவது புதிரை அறுவடை செய்தனர்.
பின்னர் அறுவடை செய்யப்பட்ட நெல்லில் இருந்து அமுது தயாரித்து கந்தனுக்கு படையல் செய்து பூசைகள் இடம்பெற்றன.