
கொழும்பில் இருந்து வடக்கிற்கான ரயில் பாதையை எதிர்வரும் மார்ச் மாதம் முதல் 5 மாதங்களுக்கு தற்காலிகமாக மூடுவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
ரயில் தண்டவாள புனரமைப்பு நடவடிக்கைகளுக்காகவே இந்தப் பாதையை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி குறித்த காலப்பகுதியில் கொழும்பில் இருந்து வடக்கு நோக்கி பயணிக்கும் ரயில் மஹவ ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹவ முதல் ஓமந்தை வரையிலான 120 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ரயில் பாதை இந்திய உதவியின் கீழ் இவ்வாறு அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.