கொழும்பு – கண்டியை இணைக்கும் மத்திய அதிவேக வீதியின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான பகுதி மக்கள் பாவனைக்காக திறந்து வைவக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோரால், நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.
40.91 கிலோ மீட்டர் நீளத்தை கொண்ட மீரிகம – குருநாகல் அதிவேக வீதியை நிர்மாணிப்பதற்கு, அரசாங்கம் 149 பில்லியன் ரூபாயைச் செலவிட்டுள்ளது. அனைத்து நிர்மாணப் பணிகளும், உள்நாட்டுப் பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த வீதியை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, ஐந்து வருடங்களில் நிறைவேற்றுவதாக நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்த அனைத்தையும், எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் நிறைவேற்றுவதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பொய்ப் பிரசாரங்களினால் மனம் தளர்ந்துவிடாமல், நாட்டு மக்களின் நலனுக்காக ஒன்றிணைந்துச் செயற்பட வருமாறு, அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன்போது உரையாற்றிய பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அதிவேக நெடுஞ்சாலைகளின் அளவுக்கு விமர்சிக்கப்படும் திட்டம் ஒன்று இந்த நாட்டில் இல்லை எனவும், விமர்சித்துக்கொண்டே அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களின் விமர்சனங்களுக்கு வார்த்தைகளால் பதிலளிப்பதை விட செயல்களினால் பதிலளிப்பதே அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.