இலங்கை அதிபர், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் சேவைகள் என்பன அகப்படுத்தப்பட்ட சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்வி அமைச்சின் செயலாளரினால் இது தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தலானது 2021 ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையிலேயே வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம் உள்ளிட்ட ஏனைய நிறுவன நடவடிக்கை தொடர்பான அதிகாரங்கள் மற்றும் ஏற்பாடுகள், அந்தந்த சேவைகளுக்காக தற்போது அமுலில் உள்ளவாறு தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை அதிபர், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் ஆலோசனை சேவைகளுக்கான விசேட வேதன முறைமையை திருத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.