
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வாழ்க்கை வரலாறு பற்றி எழுதப்பட்ட நூலொன்று வெளியிடப்பட்டுள்ளது.
தரிந்து தொட்டவத்தவினால் முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கையின் முக்கியமான பல தருணங்களை உள்ளடக்கி ‘சந்திரிக்கா’ என்ற பெயரில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று இந்த நூல் வெளியீடு இடம்பெற்றதுடன், இதில் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய, கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க, மாற்றுக்கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து உள்ளிட்ட அரசியல், சிவில் செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க சிறப்புரை ஆற்றினார்.