மத்திய அதிவேக வீதியின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான பகுதி மக்கள் பாவனைக்காக ஜனவரி 15 திறந்து வைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் இந்த வீதி திறப்பு விழா நடைபெறவுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக வீதியின் இரண்டாம் கட்டத்தின் நீளம் 40.91 கிலோ மீட்டர்களாகும். சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதிப்பைக் குறைப்பதற்காக கட்டப்பட்ட இந்த நெடுஞ்சாலை நகர்ப்புறங்களைத் தவிர்த்து, முக்கியமாக வெற்றுநிலங்கள் வழியாகச் செல்லும் 4 வழிப்பாதையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த வீதியின் மீரிகமவிலிருந்து குருநாகல் வரையிலான வீதி, இலங்கையின் மிக அழகிய அதிவேக நெடுஞ்சாலைப் பிரிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
மீரிகம, நாகலகமுவ, தம்பொக்க, குருநாகல் மற்றும் யக்கபிட்டிய ஆகிய இடங்களில் பணம் செலுத்தும் கவுன்ட்டர்களுடன் ஐந்து பரிமாற்ற நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 137 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது.