இந்தியாவினால் இலங்கைக்கு 900 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணி உதவியாக இது வழங்கப்பட்டுள்ளதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்த இந்தியா 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருந்தது.
அந்த தொகையுடன் மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக இந்தியத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது .