லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து தெஷார ஜயசிங்க நீக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து அந்த நிறுவனத்தின் புதிய தலைவராக ரேணுக பெரேராவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் வெடிப்பு சம்பவங்கள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டு நிலைமையை அடிப்படையாகக் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்றைய தினம் லிட்ரோ எரிவாயு களஞ்சியத் தொகுதிக்கு இன்று கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.