மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பான தீர்மானத்தை தற்காலிகமாக கைவிடுவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் தேவையான எரிபொருளை விநியோகிப்பதற்கு இணக்கம் வெளியிட்டத்தையடுத்து, மின் வெட்டை அமுல்படுத்தும் தீர்மானம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், அதனை கைவிட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சின் மேலதிக செயலாளர் யுகத் தர்மகீர்த்தி தெரிவித்துள்ளார்.