தேசியக் கல்வியியற் கல்லூரிகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் கல்வியியற் கல்லூரிகளை திறப்பதற்கும் 18 ஆம் திகதி முதல் அதன் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சர் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
இலங்கையில் நிலவும் கொவிட் தொற்று நிலைமை காரணமாக கடந்த மாதங்களாக கல்வியியற் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் அதன் கல்வி நடவடிக்கைகளை சுகாதார கட்டுப்பாடுகளுடன் மீள ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.