இலங்கை முழுவதும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆசன முன்பதிவு ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டமை உள்ளிட்ட பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் இன்றைய தினம் தூர இடங்களுக்கான ரயில் சேவைகள் உள்ளிட்ட பல சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.