November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புவோருக்கு மத்திய வங்கி ஆளுநர் விடுக்கும் வேண்டுகோள்!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பணம் அனுப்பும் போது சட்டபூர்வமான முறைகளை மாத்திரம் பின்பற்றுமாறு மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதனை விடுத்து, உண்டியல் முறை போன்ற சட்டவிரோத வழிகளில் பணம் அனுப்பினால் இங்கே பணத்தை பெற்றுக்கொள்பவர்களே பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ள நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொருளாதார நிலவரம் தொடர்பில், அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வெளிநாட்டு நாணயக் கணக்குகளை பேணுபவர்களுக்கு எந்தவித தடைகளும் கிடையாது என்றும், அவர்கள் வழமைப் போன்று அதனை பேணிச் செல்ல முடியும் என்பதுடன், வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்புபவர்களும் சட்டபூர்வ வழிகளில் அதனை அனுப்ப முடியுமென்றும் மத்திய வங்கி ஆளுநர் கூறியுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று தான் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.