May 3, 2025 11:56:32

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எதிர்க்கட்சித் தலைவர் நல்லூர் ஆலயத்தில் வழிபாடு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக வடக்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், தனது பிறந்த தினமான இன்று நல்லூர் ஆலயத்திற்கு சென்றிருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வருகையையொட்டி நல்லூர் ஆலய சூழலில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதேவேளை யாழ். மாவட்ட மறை மாவட்ட ஆயரையும் எதிர்க்கட்சித் தலைவர் இன்றைய தினம் சந்தித்தார்.

ஆயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று காலை இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான புத்திக்க பத்திரன, எரான் விக்ரமரட்ன உள்ளிட்டோரும் அங்கு சென்றிருந்தனர்.