November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனைய நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் இன்று அதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

1,320 மீட்டர் நீளமுள்ள கிழக்கு முனையத்தின் கட்டுமானப் பணிகளை 2024 ஆம் ஆண்டில் நிறைவு செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் பிரபல்யமான துறைமுகங்களின் தரவரிசை பட்டியில் இலங்கை 23ஆவது இடத்தில் உள்ளது.

2035ஆம் ஆண்டை அடையும் போது கொழும்பு துறைமுகத்தை ஏராளமான கொள்கலன்களை கையாளும் பிரபல்யமான துறைமுகமாக மாற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக துறைமுக அமைச்சர் ரோகித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் இதன் நிர்மானப் பணிகளை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த காரணத்தினால் இந்தியாவுக்கு அதனை வழங்காது இலங்கையினாலேயே அதனை அபிவிருத்தி செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.