May 26, 2025 2:01:10

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் இன்று தொடக்கம் இரவு நேர மின்வெட்டு அமுல்!

Electricity Power Common Image

மின்சார நெருக்கடி நிலைமையால் இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று தொடக்கம் இரவு நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள மின்வெட்டு அமுல்படுத்தல் தொடர்பான பட்டியலுக்கமைய மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக A, B, C, D என 4 பிரிவுகளாக பிரதேசங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

மறு அறிவித்தல் வரையில் இது தொடரும் என்று மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

மின்வெட்டு நேரங்கள் – பிரதேசங்கள் தொடர்பான தகவல்களை இந்த இணைப்பில் பார்வையிடலாம்