June 17, 2025 21:04:09

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக மீண்டும் சாலிய பீரிஸ் தெரிவு

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மீண்டும் தெரிவாகியுள்ளார்.

2022/23 ஆம் ஆண்டிற்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தல் இன்று நடைபெற்றது.

இதில் சங்கத்தின் தலைவராக சாலிய பீரிஸும் , செயலாளராக இசுரு பாலபடபெந்தியும் தெரிவு செய்யப்பட்டனர்.

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற 2021/22 ஆண்டுக்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் தேர்தலிலும் சாலிய பீரிஸே தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இவர் 2015- 2017 காலப்பகுதியில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதித் தலைவராகவும் செயற்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.