நாளாந்தம் மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பில் இலங்கை மின்சார சபை ஆராய்ந்து வருகின்றது.
இதற்கான அனுமதியை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ளதாக அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதன்படி மின்சார சபை மின்வெட்டு தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மின்நிலையங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப பிரச்சனைகள் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டே மின்வெட்டை அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மின்வெட்டு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் மின்சார சபையினால் வெளியிடப்படும் என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.