January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பு – காங்கேசன்துறை இடையே புதிய சொகுசு ரயில் சேவை!

கொழும்பு கல்கிசைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையே இன்று முதல் புதிய சொகுசு ரயில் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியினால் இந்த ரயில் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தினசரி காலை 5.10 மணிக்கு கொழும்பு, கல்கிசையில் இருந்து புறப்படும் ரயில் பகல் 12.17 மணிக்கு காங்கேசன்துறையை சென்றரையும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பின்னர் பிற்பகல் 1.15 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்படும் ரயில் இரவு 8.25 மணிக்கு கல்கிசை ரயில் நிலையத்தை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

10 பெட்டிகளை கொண்டதாக இயங்கும் இந்த ரயில் சேவையில் அனைத்துப் பெட்டிகளும் குளிரூட்டப்பட்டதாகவும், அனைத்து அடிப்படை வசதிகளை கொண்டதாகவும் இருக்கும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கல்கிசையில் இருந்து காங்கேசன்துறை வரையில் பயணிக்க 1700 ரூபா கட்டணம் அறிவிடப்படும் என்பதுடன், இதற்காக ஒரு மாதத்திற்கு முன்பிருந்து முன்பதிவுகளை செய்ய முடியுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.