இலங்கை வந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பு அலரி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது சுற்றுலாத்துறை, முதலீடுகள், கொவிட் நிவாரண உதவித் திட்டங்கள், கொவிட் வைரஸ் பரவலுக்கு பின்னரான தயார் நிலை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.
அத்துடன், இலங்கையிலுள்ள மருத்துவ மாணவர்களை சீனாவிற்கு அனுப்புவது குறித்தும் இந்த சந்திப்பின் போது இருவருக்கும் இடையே கலந்துரையாடப்பட்டள்ளது. !