File Photo
கொழும்புத் துறைமுக நகரில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதை மற்றும் படகு சேவை பிரிவு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆகியோரினால் இன்று அவை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை – சீனா இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65 ஆண்டு நிறைவையொட்டி இவை திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி துறைமுக நகர பகுதியில் உள்ள நடைபாதை மற்றும் இலகு ரக படகு சேவை பிரிவுகளை மக்கள் பயன்படுத்த முடியுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை வந்துள்ள சீன வெளியுறவு அமைச்சர் இன்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.