கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள நாராஹேன்பிட்டி ஸ்ரீ அபயாராம புராதன விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரருக்கு கௌரவமளிக்கும் விழா பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று நடைபெற்றது.
பொதுச் சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் ஏற்பாட்டில், கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, தாதியர்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இலங்கை வரலாற்றின் பல்வேறு சந்தர்ப்பங்களில் தேசிய பிரச்சினைகள் மற்றும் அனர்த்தங்களின் மத்தியில் மஹாசங்கத்தினர் முன்னின்று செயற்பட்டமைக்கு வரலாறு சாட்சியளிக்கும். இந்நாட்டின் தேசிய பிரச்சினைகளின் போது முன்னின்று பெருந்தன்மையாக உழைத்த ஒருவராக நமது தேரர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதன்போது தெரிவித்துள்ளார்.