சம்பிரதாய அரசியல் முறைகளை மாற்றியமைப்பதற்காக புதிய பொதுஜன இயக்கமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்கங்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை உள்ளடக்கியதாக இந்த இயக்கம் அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி தற்போது நாடு முழுவதும் மக்கள் சந்திப்புக்களை நடத்தி வருகின்றது.
இதன்படி புதிய கூட்டணியை அமைத்து அதனை இயக்கமாக முன்னெடுத்துச் செல்வதற்கு ஜே.வி.பி திட்டமிட்டுள்ளது.