சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இன்று மாலை அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இரண்டு நாட்களுக்கு இங்கு தங்கியிருக்கும் வெளியுறவு அமைச்சர், கொழும்பில் நடைபெறவுள்ள சீன – இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு விழாவில் கலந்துகொள்ளவுள்ளார்.
இதன்போது அவர், பொருளாதார விடயங்கள் தொடர்பான முக்கிய கலந்துரையாடல்களிலும் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.