மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு இன்னல்களைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குருநாகல் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
மக்களுக்கு நிவாரணம் வழங்கும்போது, வாக்குகளையோ, தேர்தலையோ எதிர்பார்த்து நாங்கள் எந்தத் திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை. மக்கள் சிரமங்களை தீர்ப்பதற்காகவே நிவாரணப் பொதிகளை வழங்குகின்றோம் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். .
எவ்வாறாயினும் மக்களின் கஷ்டங்கள் குறித்து தெளிவான புரிதலை அரசாங்கம் கொண்டுள்ளது என்றும், இதன்படி அவர்கள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.