இலங்கையில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பாண் உற்பத்திக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் எதிர்வரும் வாரங்களில் பாணுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று அந்தச் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.
கோதுமை மா நிறுவனங்கள் டொலர் நெருக்கடிக்குள் சிக்கியிருப்பதால் போதுமான அளவுக்கு மாவை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் மா மூடைகளை பெற்றுக்கொள்வதற்கு பேக்கரி உரிமையாளர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்குவதாகவும், இதனால் பேக்கரி உற்பத்தி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.