January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிவாயு வெடிப்புகள் தொடர்பில் அரசாங்கத்திற்கு சந்தேகம்!

எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் இரகசியமான முறையில் ஆராய்ந்து வருவதாக ஆளும் கட்சி பிரதம கொரடாவான பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

குருநாகல் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

அந்த நிகழ்வில் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவும் கலந்துகொண்டிருந்தார்.

எரிவாயு வெடிப்புகள் கொழும்பு- 7 பிரதேசம், வடக்கு மாகாணம், குருநாகல் நகர், கண்டி ஆகிய பிரதேசங்களில் இடம்பெறவில்லை என்றும் இதனால் இந்த இந்த சம்பவங்கள் தொடர்பில் சந்தேகங்கள் நிலவுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இது தொடர்பில் இரகசியமான முறையில் ஆராய்ந்து வருவதாகவும், ஜனாதிபதியும் இது தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.