இலங்கையில் சில பிரதேசங்களில் இடைக்கிடையே திடீர் மின் தடைகள் எற்படக்கூடும் என்று மின்சார சபை தெரிவித்தள்ளது.
களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தில் மின்பிறப்பாக்கியில் ஏற்பட்டள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்றைய தினம் சில பிரதேசங்களில் மின்தடை ஏற்பட்டது.
எனினும் சிறிது நேரத்தில் குறித்த பிரதேசங்களில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது.
இந்நிலையில் களனிதிஸ்ஸ அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாரை சீர்செய்யும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும், இதனால் இன்றைய தினமும் நாட்டில் மின்தடைகள் ஏற்படலாம் என்றும் மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை நாட்டில் மின்சாரத்துறையில் நிலவும் நெருக்கடி நிலைமையால் எதிர்வரும் வாரங்களில் மின்வெட்டு அமுலாகலாம் என்று மின்சாரதுறை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.