திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் தொடர்பான உடன்படிக்கை, இன்று மாலை கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்த உடன்படிக்கையில் காணி ஆணையாளர் நாயகம், திறைசேரியின் செயலாளர், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இந்தியாவின் ஐஓசி நிறுவனம் ஆகியன கைச்சாத்திட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 85 எண்ணெய்க் குதங்கள் இலங்கைக்கும் ஏனைய 14 எண்ணெய் குதங்கள் இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையிலும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கைப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 51 வீதமும், லங்கா ஐ.ஓ.சி கம்பனிக்கு 49 வீதமும் பங்குரிமை கிடைக்கும் வகையில் உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது.