January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொழும்பில் 16 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் ஜனவரி 8 ஆம் திகதி 16 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

8 அம் திகதி காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலும் நீர்வெட்டு அமுலில் இருக்கும் என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டே, கடுவெல மாநகர சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் மற்றும் மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும், கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும் மற்றும் இரத்மலானை பிரதேசத்திலும் நீர்வெட்டு அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தலே பிரதான நீர்சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த வேலைகள் காரணமாகவே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.