இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கட்டாருக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது அந்நாட்டின் புதிய மத்திய வங்கி ஆளுநர் ஷேக் பந்தார் பின் மொஹமட் பின் சௌத் அல்தானியை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை இரு தரப்பினருக்கும் நன்மை கிடைக்கும் நடவடிக்கைகள் மற்றும் இருதரப்பு நிதி உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் இருவரும் கலந்துரையாடியதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.