January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்கும் சுற்றுநிருபம் வெளியானது!

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நிவர்த்தி செய்யும் சுற்றுநிருபம் வெளியாகியுள்ளது.

பொது நிர்வாக அமைச்சினால் இன்றைய தினத்தில் இந்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பள முரண்பாட்டுப் பிரச்சனை தொடர்பாக அதிபர், ஆசிரியர்கள் கடந்த வருடத்தில் போராட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில், அதற்கு தீர்வு காண்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இதன்படி தேசிய சம்பள ஆணைக்குழு மற்றும் நிதி அமைச்சின் இணக்கப்பாட்டுடன் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து நடைமுறையாகும் வகையில் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.