January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ். வல்வெட்டித்துறை ‘பட்டத் திருவிழா’ இடைநிறுத்தம்!

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில்தைப்பொங்கல் தினத்தன்று நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த பட்டத் திருவிழாவை இடைநிறுத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் தைப்பொங்கல் தினத்தில் வல்வெட்டித்துறையில் நடத்தப்பட்டு வரும் பட்டத் திருவிழாவை இம்முறையும் வழமைப் போன்று நடத்துவதற்கு ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்திருந்தனர்.

இதற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண அனுசரணையை வழங்குவதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நாட்டில் தற்போது நிலவும் கொவிட் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு பட்டத் திருவிழாவை இடைநிறுத்துமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இது தொடர்பில் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் பிரதேச மக்களுடன் கலந்துரையாடி, பட்டத் திருவிழாவை இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளனர்.