இலங்கையில் பாடசாலைகளை வழமைப் போன்று நடத்திச் செல்வதற்கு சுகாதார பணிப்பாளரினால் கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜனவரி 10 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் பாடசாலைகளில் தரம் 1 முதல் 13 வரையிலான வகுப்புகளை வழமைப் போன்று நடத்திச் செல்ல முடியுமென்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்று கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளுக்கமைய தற்போது வகுப்பொன்றில் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்களுடன் மாத்திரம் கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்நிலையில் சுகாதார பணிப்பாளர் வழங்கியுள்ள அனுமதிக்கமைய 10 ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்கு அழைக்க முடியும்.