February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கண்டி தலதா மாளிகையில் ஜனாதிபதி வழிபாடு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இன்று முற்பகல் வழிபாட்டில் ஈடுபட்டார்.

ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்ற ஜனாதிபதியை, தியவடன நிலமே நிலங்க தேல வரவேற்றார்.

இதேவேளை தலதா மாளிகை வளாகத்தில் கூடியிருந்த பொதுமக்களும், ஜனாதிபதிக்கு வரவேற்பளித்தனர். இதன்போது மக்களுடன் சுமூகமாகக் கலந்துரையாடிய ஜனாதிபதி, அவர்களிடம் நலன் விசாரித்தறிந்து கொண்டார்.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ. கமகே, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

This slideshow requires JavaScript.