May 15, 2025 7:33:35

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை மத்திய வங்கி ஆளுநரின் முக்கிய அறிவித்தல்!

இலங்கை வங்கிகளில் வாடிக்கையாளர்களின் வெளிநாட்டு நாணயக் கணக்குகளில் உள்ள நிலுவைகளை வேறு பிரிவுகளுக்கு வலுக் கட்டாயமாக மாற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என்று மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இலங்கை வர்த்தக வங்கிகளில் உள்ள உள்ள வெளிநாட்டு நாணய இருப்புத் தொகைகளில் 25 வீதத்தை வேறு பிரிவுகளுக்கு மாற்ற வேண்டும் என மத்திய வங்கி அறிவுறுத்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள மத்திய வங்கி ஆளுநர் அவ்வாறான அறிவிப்புகள் எதனையும் விடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என்றும், அவை முற்றிலும் பொய்யானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.