November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் உள்ள ஆசியாவின் ராணிக்கு விலைபேசிய டுபாய் நிறுவனம்

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ‘ஆசியாவின் ராணி’ (Queen of Asia) என பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கக் கல்லை டுபாயில் உள்ள நிறுவனம் ஒன்று கொள்வனவு செய்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

அதனை அந்த நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

310 கிலோகிராம் எடைகொண்ட ‘ஆசியாவின் ராணி’ என அழைக்கப்படும் இந்த நீலக்கல், இரத்தினபுரி – பட்டுகெதர பகுதியில் வைத்து சில மாதங்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு சொந்தமான ஆய்வகத்தில், இது பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

ஒற்றைப் படிகத்தினால் அமைந்துள்ளதால் இது 15 இலட்சத்துக்கும் அதிக கரட் பெறுமதியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இணையவழியில் சர்வதேச ஏல விற்பனை நடத்தப்பட்டது. இதன்போது டுபாய் நிறுவனம் அதனை கொள்வனவு செய்வதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளதாக இலங்கை தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.