June 17, 2025 10:04:42

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ராஜித சேனாரட்னவுக்கு கொவிட் தொற்று உறுதி!

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று அறிகுறிகள் இருந்ததை தொடர்ந்து அவர் கொவிட் பரிசோதனையை செய்த போதே அவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஜனவரி முதலாம் திகதிக்கு பின்னரான காலப்பகுதியில் அவருடன் நெருக்கமான தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்துவதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.